Posts

Showing posts from October, 2019
மருத்துவம் என்னும் ஆறெழுத்து மந்திரம் இன்று பலரையும் உயர்த்தியிருக்கிறது. யாரை என்றால் மருத்துவர்களை. நோயில் விழுந்தவர்களைக் காப்பாற்றியதால் அவர்களது தட்சணையில் மருத்துவம் செய்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை நோயில் சிக்கியபிறகும் விழிப்பாக இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் நோயில் விழுந்துகொண்டேயிருக்கிறார்கள். அவ்வாறு விழுந்து விட்டவர்களையும் நோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவும்தான் இந்த சிறு கட்டுரை. நமக்கு ஆயுள்பலம் என்ன என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. அதனால் எப்போது இறப்பு வந்தாலும் இறந்து விடுவோம் என்ற தவறான ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து வளர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் உடம்பும் உயிரும் நம் கையில் இருக்கிறது என்பதை அறியத் தவறி விடுகிறோம். ஒருவரைப் பார்த்து உங்களால் எவ்வளவு காலம் உயிர் வாழமுடியும் என்று கேட்டால் அது என்ன என் கையிலா இருக்கிறது என்பார்கள். கேட்பவரும் ஒத்துக் கொள்ளும் விதமாக அது இருக்கும். நமது வாழ்நாள் பழங்காலத்தில் அதிகமாக இருந்தது என்றும் இல்லையில்லை பழங்காலத்தில் குறைவாக இருந்தது, இப்போது மருத்துவ...

Rose

Image
பனை மரத்தில் கள் இறக்கி, கள்ளுண்ட மயக்கத்தில் கட்டுண்டு கிடக்க இங்கு நிற்கவில்லை, அதே பனைமரத்தில் புதுயுகம் படைக்கப் புறப்பட்டு வந்திருக்கும் இந்தப் படை ரோஸ் தொண்டு நிறுவனத்திலிருந்து உருவாகி புதுக்கோட்டைக்குள் முகாமிட்டிருக்கிறது.